வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Updated : திங்கள், 16 நவம்பர் 2020 (17:05 IST)

அரே பாய்.. பர்த்டேவுக்கு இப்படியா வாழ்த்து சொல்றது! – வைரலாகும் சன் ரைஸர்ஸ் ட்வீட்!

பிரபல சினிமா இசையமைப்பாளர் தமனுக்கு ஐபிஎல் அணியான சன் ரைஸர்ஸ் தெரிவித்துள்ள பிறந்தநாள் வாழ்த்து வைரலாகியுள்ளது.

இந்திய சினிமாவில் தெலுங்கு, கன்னடம், தமிழ் என பல மொழி படங்களுக்கு இசையமைத்துள்ளவர் தமன். தமிழில் இவர் இசையமைத்த ஒஸ்தி, காஞ்சனா போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார். தெலுங்கில் சமீபத்தில் இவர் இசையமைத்த அல வைகுந்த புரம்லோ படத்தின் பாடல் இந்திய அளவில் ட்ரெண்டானது.

இன்று தமன் பிறந்தநாளுக்கு பல திரைப்பிரபலங்களும் வாழ்த்து கூறி வருகின்றனர். இந்நிலையில் தமன் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறியுள்ள சன் ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி தனது ட்விட்டரில் தங்கள் அணி கேப்டன் டேவிட் வார்னர் முன்னர் தமன் இசையமைத்த புட்டபொம்மா பாடலுக்கு ஆடிய வீடியோவை பதிவிட்டுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.