1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 16 நவம்பர் 2020 (16:57 IST)

’’சிம்பு பட உட்பட ஒரே நேர நான்கு படங்கள்’’ இயக்கி வரும் சுசீந்தரன்.....

இன்றைய தேதியியில் தமிழ் சினிமாவில் ஒரே நேரத்தில் அதிகமான படங்களை இயக்கி வருபவர் இயக்குநர் சுசீந்தரன்.

வெண்ணிலா கபடிக்குழு, நான் மகான் அல்ல , பாண்டியநாடு போன்ற படங்களை இயக்கி சுசீந்திரன் சமீபத்தில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் படத்தை வெறும் 40 நாட்களில் முடித்து ஆச்சர்யமூட்டினார். தற்போது போஸ்ட் புரொடெக்சன் வேலைகள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், ஏஞ்சலினா படம் பாதி ஷூட்டிங் முடிந்துள்ள நிலையில், ஜெய் நடிப்பில் 2 படங்களை ஒரே நேரத்தில் இயக்கினார். இப்படங்களில் ஒன்றிக்கு சிவ சிவா என்று பெயர் சூட்டியுள்ளார். இப்படத்தில் ஜெய்க்கு ஜோடியாக மீனாட்சி என்பவர் நடித்துள்ளார்.

இந்நிலையில் சுசீந்திரன் இவ்வளவு வேலைகளையும் எப்படி மேனேன்ஞ் செய்கிறார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்த நிலையில், அவரது துணை இயக்குநர் குழு அந்தந்த படங்களின் வேலையைக் கவனித்துக் கொள்வதாகவும் மேற்படி, அவரது மேற்பார்வையில் அவை நடைபெறும் எனவும் கூறப்படுகிறது.