திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : திங்கள், 5 ஜூன் 2023 (14:57 IST)

கோலிய பத்தி ஒரு வார்த்தைல சொல்லுங்க… பில்டப் கொடுத்து மாஸ் ஏற்றிய ஆஸி வீரர்கள் !

உலக சாம்பியன்ஷிப் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நாளை மறுநாள் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.  இந்த இறுதி போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோத உள்ளன. அதற்கான இரு அணிகளும் ஒரு வாரத்துக்கு முன்பே ஆஸ்திரேலியாவில் முகாமிட்டுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக பார்ம் இல்லாமல் தவித்த விராட் கோலி, கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் தன்னுடைய ரன் மெஷின் மோட்-க்கு சென்றார். அதனால் இப்போது எதிரணி பவுலர்களுக்கு சிம்ம சொப்பனமான விளங்கி வருகிறார். நடக்கும் போட்டியில் அவர் விக்கெட்தான் ஆஸி அணியின் முதல் குறியாக இருக்கும் என எதிர்பார்க்கலாம்.

இந்நிலையில் ஐசிசி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோவில் ஆஸி அணி வீரர்கள் கோலி பற்றி புகழ்ந்து பேசியுள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் கடந்த 10 ஆண்டுகளாக கோலி எப்படி அணியை வழிநடத்தி செல்கிறார் என்பது பற்றி அந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ICC (@icc)