இப்பதான் ஜெயிச்சோம்.. அதுக்குள்ளயா..! – சன் ரைசர்ஸ் அணியில் முக்கிய வீரர் விலகல்!
ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியிலிருந்து முக்கிய வீரர் விலகியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடப்பு ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. இந்த சீசனில் ஆரம்பம் முதலே தோல்வியடைந்து வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் கடந்த இரண்டு ஆட்டங்களிலும் சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது.
ஆனால் அதற்குள் அணியிலிருந்து முக்கியமான வீரர் வெளியேறும் சூழல் ஏற்பட்டுள்ளது. அணியின் நம்பிக்கை நட்சத்திர வீரரான வாஷிங்டன் சுந்தர் காயம் காரணமாக அடுத்த ஆட்டத்தில் விளையாட மாட்டார் என கூறப்பட்டுள்ளது. வாஷிங்டன் சுந்தரின் விலகல் அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தலாம் என கூறப்படுகிறது.