பிசிசிஐ வருடாந்திர கூட்டத்தில் ரவிசாஸ்திரி & ஷுப்மன் கில்லுக்கு விருதுகள்!
கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக தொடர்ச்சியாக சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தி வருகிறார் இந்திய அணியின் இளம் பேட்ஸ்மேன் ஷுப்மன் கில். இதன் மூலம் ஒருநாள் போட்டிகளுக்கான தரவரிசையில் நம்பர் 1 பேட்ஸ்மேனாக கடந்த வருடத்தின் பெரும்பாலான நாட்கள் இடம்பிடித்திருந்தார்.
இந்திய அணி சார்பில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் சில வீரர்களில் ஷுப்மன் கில்லும் ஒருவர். ஆனால் ஒருநாள் மற்றும் டி 20 போட்டிகள் அளவுக்கு இன்னும் டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் இன்னும் தன்னுடைய ஃபார்மை கண்டுபிடிக்கவில்லை.
இந்நிலையில் இன்று மாலை ஐதராபாத்தில் நடக்கும் பிசிசிஐ வருடாந்திர கூட்டத்தில் ஷுப்மன் கில்லுக்கு 2003 ஆம் ஆண்டுக்கான சிறந்த விருது அளிகப்பட உள்ளது. இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதும் இந்த கூட்டத்தில் வழங்கப்பட உள்ளது.