1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Shubman gill talked about the loss against MI

பவர்ப்ளேயில் செய்த தவறுதான் தோல்விக்கு முக்கியக் காரணமே அதுதான்… ஷுப்மன் கில் கருத்து!

ஐபிஎல்
ஐபிஎல் தொடரில் நேற்று மும்பை மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே எலிமினேட்டர் போட்டி நடைபெற்ற நிலையில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி மிக அபாரமாக பேட்டிங் செய்து, 20 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது.   அந்த அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் ஷர்மா 50 பந்துகளில் 81 ரன்கள் அடித்தார். அவர் 9 நான்கு, சிக்ஸர்கள் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து பேட் செய்த குஜராத் டைட்டன்ஸ் அணி ஆரம்பத்திலேயே ஷுப்மன் கில்லின் விக்கெட்டை இழந்தாலும் சாய் சுதர்சன் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் சிறப்பாக விளையாடி இலக்கைத் துரத்தினர். ஆனாலும் தேவைப்படும் ரன்கள் அதிகமாக இருந்ததாலும், அவ்வப்போது விக்கெட்கள் விழுந்ததாலும் அந்த அணியால் இலக்கை எட்டமுடியவில்லை. 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்களை இழந்து 208 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது.

இந்த தோல்விக்குப் பின்னர் பேசிய ஷுப்மன் கில் “கடைசி ஓவர்கள் எங்களுக்கு உகந்த வழியில் செல்லவில்லை. மூன்று எளியக் கேட்சுகளை பவர்ப்ளேயில் தவறவிட்டது சரியில்லை. கடைசியாக சில ஆட்டங்கள் எங்களுக்கு சாதகமாக அமையவில்லை. இந்த மைதானத்தில் 210 என்பது துரத்தக் கூடிய இலக்கு. ஆனால் நாங்கள் கூடுதலாக ரன்களைக் கொடுத்துவிட்டோம்.” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth