1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Shubman Gill talked about Rohit Sharma retirement speculations

ரோஹித் ஷர்மா ஓய்வா?... அப்படி எந்த பேச்சும் இல்லை!- ஷுப்மன் கில் தகவல்!

சாம்பியன்ஸ் கோப்பை
நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடர் இறுதிக் கட்டத்தை எட்டிவிட்டது. இதுவரை நடந்த போட்டிகளில் வெற்றி பெற்று இந்தியா மற்றும் நியுசிலாந்து ஆகிய இரு அணிகளும் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளன. இந்நிலையில் இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதும் இன்று மதியம் 2.30 மணிக்கு நடக்க உள்ளது.

இந்த போட்டிதான் கேப்டனாக ரோஹித் ஷர்மாவின் கடைசிப் போட்டியாக இருக்கும் என தகவல்கள் பரவி வருகின்றன. தற்போது 37 வயதாகும் அவர் எப்படியும் அடுத்து வரும் 50 ஓவர் உலகக் கோப்பையில் விளையாட மாட்டார். அதனால் இப்போதிருந்தே புதியக் கேப்டனை தயார்படுத்துவதற்காக இந்த முடிவு எடுக்கப்பட உள்ளதாக சொல்லப்படுகிறது.

இதுபற்றி பேசியுள்ள துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா “இப்போது ரோஹித் ஷர்மாவின் ஓய்வு பற்றி எந்த பேச்சும் ஓய்வறையில் நடக்கவில்லை. இப்போது அனைவரின் கவனமும் நியுசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன்ஸ் கோப்பையை வெல்வதில்தான் உள்ளது. அவர் ஓய்வு பற்றி யோசிக்கிறாரா என்று தெரியவில்லை. அப்படி இருந்தால் இறுதிப் போட்டிக்குப் பின் யோசித்து அறிவிப்பார்” எனக் கூறியுள்ளார். 
About Writer
vinoth