1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Shreyas iyer will be add to BCCI central agreement

மீண்டும் பிசிசிஐ மத்தியப் பட்டியலில் இணையும் ஸ்ரேயாஸ் ஐயர்!

ஸ்ரேயாஸ் ஐயர்
சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை மூன்றாவது முறையாக வென்றது. ஆனால் சமீபத்தில் நடந்த மெஹா ஏலத்தில் அவரை கொல்கத்தா அணி தக்கவைக்கவில்லை.

அதே போல சமீபகாலமாக போட்டிகளிலும் அவருக்கு தற்போது வாய்ப்புகள் அரிதாகி வருகின்றன. கடந்த ஆண்டு நடந்த 50 ஓவர் உலகக் கோப்பை போட்டியில் அவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலும் அதன் பிறகு அவருக்கு போதுமான வாய்ப்புகள் அணியில் கிடைக்கவில்லை. டி 20 உலகக் கோப்பை தொடரில் கூட அவர் இடம்பெறவில்லை.

இந்நிலையில் தற்போது சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இடம்பெற்ற அவர் மிகச்சிறப்பாக மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக செயல்பட்டு வருகிறார். இதையடுத்து அவர் தற்போது மீண்டும் பிசிசிஐயின் மத்திய ஒப்பந்தத்தில் இணையவுள்ளார் என சொல்லப்படுகிறது. கடந்த ஆண்டு வெளியிட்ட மத்தியப் பட்டியலில் அவர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த கட்டுரையில்
அது என்னுடைய இயல்பான கொண்டாட்ட முறை… மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன் -. பாகிஸ்தான் வீரர் அப்ரார்!