தொடர்புடைய செய்திகள்
- டெஸ்ட் போட்டிகளில் முக்கிய சாதனைகளில் தோனியை முந்திய ஜடேஜா!
- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடர்… இந்திய அணி இன்று அறிவிப்பு?
- கே.எல்.ராகுல், ஜடேஜா, துருவ் அடித்த சதங்கள்.. 500ஐ நெருங்கியது இந்தியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோர்..!
- தோனி சாதனையை சமன் செய்த ஜடேஜா.. அடுத்த இலக்கு சேவாக் தான்..!
- தீவிரவாதத்தை நிறுத்தவில்லை என்றால், வரைபடத்தில் காணாமல் போய்விடுவீர்கள்: பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை
ஆஸ்திரேலியாத் தொடரில் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வு… ஜெய்ஸ்வால் & சூர்யகுமாருக்கு வாய்ப்பு?
கிரிக்கெட் விளையாடும் அணிகளில் மிகவும் பிஸியான அணியாக உள்ளது இந்தியா. கிட்டத்தட்ட மூன்று வடிவங்களுக்கும் தனித்தனியாக அணியே இந்தியாவிடம் உள்ளது. அதனால் தொடர்ச்சியாக போட்டிகளை விளையாடி வருகிறது. கடந்த வாரம் டி 20 வடிவில் ஆசியக் கோப்பைத் தொடரில் விளையாடி வெற்றி பெற்ற இந்தியா, தற்போது வெஸ்ட் இண்டீஸுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
இதையடுத்து அக்டோபர் 19 ஆம் தேதி தொடங்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு நாள் போட்டித் தொடரில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான அணி இன்று அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் கோலி மற்றும் ரோஹித் ஆகியோர் 8 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சர்வதேசப் போட்டிகளில் மீண்டும் தேர்வுசெய்யப்படவுள்ளனர்.
மேலும் தொடர்ச்சியாக விளையாடி வரும் ஷுப்மன் கில்லுக்கு ஓய்வளிக்கப்படும் எனத் தெரிகிறது. ஜெய்ஸ்வால் மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் இந்த தொடரில் வாய்ப்புப் பெறலாம் என்றும் சொல்லப்படுகிறது.