டிராவிட்டின் இந்த முடிவு எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது… ரிக்கி பாண்டிங் கருத்து!
இந்திய அணியின் பயிற்சியாளராக டிராவிட் பொறுப்பேற்றுக் கொண்டது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது என ரிக்கி பாண்டிங் கூறியுள்ளார்.
இந்திய அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். 2023 ஆம் ஆண்டு உலகக்கோப்பையைக் கணக்கில் கொண்டே அவரை பிசிசிஐ நியமித்துள்ளது. இந்நிலையில் டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக் கொண்டது பற்றி ஆஸி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் தனது கருத்தை தெரிவித்துள்ளார்.
அதில் எனக்கு ராகுல் டிராவிட் பயிற்சியாளராக பொறுப்பேற்றுக்கொண்டது ஆச்சர்யமாக இருக்கிறது. எனக்கு அவரின் தனிப்பட்ட வாழ்க்கைப் பற்றி தெரியாது. ஆனால் அவருக்கு சிறுவயதில் குழந்தைகள் இருக்கும் என நினைக்கிறேன். அதனால் அவரின் இந்த முடிவு எனக்கு ஆச்சர்யமளிக்கிறது. ஐபிஎல் தொடரின் போது என்னை பயிற்சியாளராக பொறுப்பேற்றுக்கொள்ள சொல்லி பிசிசிஐ பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் என்னால் அதிக நேரத்தை செலவிட முடியாது என்பதால் நான் மறுத்துவிட்டேன் எனக் கூறியுள்ளார்.