திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Sinoj
Last Modified: புதன், 17 நவம்பர் 2021 (20:48 IST)

ராகுல் டிராவிட் மீது கவாஸ்கர் நம்பிக்கை!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து ரவிசாஸ்திரி விலகிய நிலையில் தற்போது புதிய பயிற்சியாளராக  ராகுல் டிராவிட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இன்று, இந்தியா மற்றும் நியூசிலாந்து அணி மோதும் முதலாவது டி20 போட்டி இன்று நடைபெற உள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் பயிற்சியாளராக சமீபத்தில் பதவியேற்ற ராகுல் டிராவிட்  மீது எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

இந்நிலையில்,  முன்னாள் இந்திய அணியின் கேப்டன் கவாஸ்கர் டிராவிட் குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், பேட்டிங்கை போலவே ராகுல் டிராவிட்தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை சிறப்பாகவும், பாதுகாப்பான முறையில் கையாளுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.