பாகுபலி போல இலங்கை அணியைத் தோளில் தூக்கி சுமக்கும் ஜெயசூர்யா.. அடுத்தடுத்து பெற்ற வரலாற்று சிறப்பு மிக்க வெற்றிகள்!
இலங்கை கிரிக்கெட் அணி 90 களிலும் 2000 களிலும் வலுவான அணியாக உலகக் கிரிக்கெட்டில் கோலோச்சியது. ரணதுங்கா, ஜெயசூர்யா, சங்ககரா, முரளிதரன், ஜெயவர்த்தனே என ஏராளமான கிரிக்கெட் ஜாம்பவான்களை உருவாக்கியது. அவர்கள் காலத்தில் இலங்கை அணி குறிப்பிடத்தகுந்த வெற்றிகளைக் குவித்தன.
ஆனால் அவர்கள் ஓய்வு பெற்ற பின்னர் இலங்கை அணி புதிய திறமையான வீரர்களை உருவாக்க முடியாமல் தவித்தது. கடந்த 10 ஆண்டுகளாக அந்த அணி உலகக் கிரிக்கெட்டில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் தற்போது அந்த அணி மீண்டும் வெற்றிப்பாதைக்குத் திரும்பியுள்ளது.
அதற்கு முக்கியக் காரணம் அந்த அணிக்குப் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள முன்னாள் வீரர் ஜெயசூர்யாதான் என்று சொன்னால் அது மிகையாகாது. அவர் தலைமையில் இலங்கை அணி அடுத்தடுத்து தொடர் வெற்றிகளை பெற்றுவருகிறது. அதன் பட்டியல் கீழ்வருமாறு:-
-
27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணிக்கு எதிராக ஒருநாள் தொடரை சமீபத்தில் வென்றது.
-
10 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கிலாந்து மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றது.
-
15 ஆண்டுகளுக்குப் பிறகு நியுசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை வென்றது.
-
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக முதல் முறையாக டி 20 தொடரை தற்போது வென்றுள்ளது.