1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (10:35 IST)

பந்து வீசி அவர் கையை உடைக்க சொன்னார்கள்; அக்தர் சொன்ன பகீர் தகவல்!

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஷோயப் அக்தர் தான் விளையாடிய கால அனுபவங்களில் நடந்த பகீர் சம்பவங்கள் குறித்து பேசியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Shoaib Akthar

பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஷோயப் அக்தர் தற்போது கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று விட்டாலும், கிரிக்கெட் தொடர்பான செய்திகளை அடிக்கடி தனது யூட்யூப் சேனல் மூலமாக வெளியிட்டு வருகிறார். பல ஆண்டுகளாக நடைபெறாமல் உள்ள பாகிஸ்தான் – இந்தியா டெஸ்ட் போட்டிகளை நடத்த வேண்டும் என பல ஆண்டுகளாக ஷோயப் அக்தர் வலியுறுத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் வேறொரு யூட்யூப் சேனலுக்கு பேட்டியளித்த ஷோயப் அக்தர் தனது கிரிக்கெட் கால அனுபவங்கள் குறித்து பேசியுள்ளார். அப்போது அவரது வேக பந்து வீச்சை தாங்க முடியாமல் பல நாட்டு கிரிக்கெட் வீரர்கள் எங்களை கொன்றுவிடாதீர்கள் என்று கெஞ்சியதாகவும் கூறியுள்ளார். இலங்கை அணியுடன் நடந்த போட்டி ஒன்றில் இலங்கை வேகப்பந்து வீச்சாளரான முத்தையா முரளிதரன் பேட்டிங் செய்தபோது யூசப் யோஹானா அக்தரிடம் “முரளிதரனின் கையை பந்தை வீசி உடைத்துவிடு” என கூறியதாகவும் கூறியுள்ளார். தானும் முரளிதரனுக்கு பவுன்சர்களாக வீசியதாக அக்தர் ஒப்புக்கொண்டுள்ளார்.