செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : வெள்ளி, 21 ஆகஸ்ட் 2020 (10:28 IST)

அவர் என்னிடம் பந்துவீசி முரளிதரனின் கைவிரலை உடைக்க சொன்னார் - அக்தர் சொன்ன ரகசியம்!

பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சாளர் சோயப் அக்தர் இந்திய அணியின் டெய்ல் எண்டர்கள் தன்னிடம் வேகமாக பந்துவீச வேண்டாம் என சொன்னதாக சொல்லியுள்ளார்.

பாகிஸ்தானின் சோயிப் அக்தர் 161.3 கிமீ வேகத்தில் பந்துவீசி இதுவரை அதிக வேகத்தில் பந்து வீசிய பந்துவீச்சாளர் என்ற சாதனையை வைத்துள்ளார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அளித்த நேர்காணல் ஒன்றில் தன்னுடைய பந்துவீச்சைப் பார்த்து பயந்து இந்திய அணியின் பின்வரிசை பேட்ஸ்மேன்கள் பொறுமையாக பந்துவீசுமாறு சொல்வார்கள் எனக் கூறியுள்ளார்.

இதுபற்றி அவர் பேசுகையில் ‘இந்திய அணி வீரர்கள் சிலர் எங்களை பார்த்து பந்தை எறிய வேண்டாம். எங்களுக்கு குடும்பம் உள்ளது என சொல்வார்கள். அதே போல இலங்கையின் முத்தையா முரளிதரன் பொறுமையாக வீசினால் நான் அவுட் ஆகி விடுகிறேன் என சொல்வார். ஒருமுறை யூசுப் யுஹானா முரளிதரன் பேட் செய்த போது பந்துவீசி அவர் விரலை ஒடித்துவிடு. அவர் சுழலில் என்னால் சரியாக விளையாடமுடியவில்லை என சொன்னார்’ எனக் கூறியுள்ளார். அகதர் சொல்லியுள்ள தகவல்கள் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளன.