செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 10 ஜூன் 2023 (13:50 IST)

இந்தியாவில் 450 ரன்களைக் கூட சேஸ் செய்ய முடியும்… ஷர்துல் தாக்கூர் சொல்லும் கணக்கு!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி இப்போது லண்டன் ஓவலில் நடந்து வருகிறது. போட்டியின் மூன்று நாட்கள் முடிந்துள்ள நிலையில் ஆஸி அணி இரண்டாவது இன்னிங்ஸில் 296 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

நேற்று இந்திய அணி பாலோ ஆனை தவிர்க்க உதவியதில் அஜிங்க்யே ரஹானே மற்றும் ஷர்துல் தாக்கூர் ஜோடிக்கு மிகப்பெரிய பங்குண்டு. நேற்று ஷர்துல் தாக்கூர் அரைசதம் அடித்து அவுட் ஆனார். இதுவரை லண்டன் ஓவலில் தாக்கூர் மூன்று போட்டிகள் விளையாடி மூன்று போட்டிகளிலும் அரைசதம் அடித்துள்ளார்.

இந்நிலையில் போட்டி குறித்த பேசியுள்ள ஷர்துல் தாக்கூர், இந்த போட்டியில் இந்திய அணி வெல்வதற்காக இருக்கும் வாய்ப்புகள் பற்றி பேசியுள்ளார். அதில் “இந்திய அணிக்கு சிறப்பான ஒரு பார்ட்னர்ஷிப் அமைந்தால், 450 ரன்களைக் கூட எங்களால் சேஸ் செய்ய முடியும்” எனக் கூறியுள்ளார்.