1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 3 அக்டோபர் 2023 (07:51 IST)

“சச்சினைப் போல கோலியைத் தூக்கிக் கொண்டாட வேண்டும்…” சேவாக்கின் ஆசை!

அக்டோபர் 5 ஆம் தேதி முதல் உலகக் கோப்பை தொடர் தொடங்க உள்ளது. இதற்காக இந்தியாவுக்கு அனைத்து அணிகளும் வந்து சேர்ந்து இப்போது பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகின்றனர். இந்தியாவில் முழு உலகக் கோப்பையும் நடக்க உள்ளதால் இந்திய அணிக்கு 2011 ஆம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையை வெல்ல மிகப்பெரிய வாய்ப்புள்ளதாக கணிக்கப்படுகிறது.

இந்நிலையில் உலகக் கோப்பை பற்றி பேசியுள்ள விரேந்திர சேவாக் “2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பையில் கோலி, ஒரு சதம் கூட அடிக்கவில்லை. அதனால் இந்த முறை அவர் அதிக சதம் அடுத்து அதிக ரன்களைக் குவிக்க வேண்டும் என ஆசைப்படுகிறேன்.

ரோஹித் ஷர்மாவும் கோலியும் சேர்ந்து உலகக் கோப்பையை வெல்ல வேண்டும். அப்போது சச்சினை தூக்கிக் கொண்டாடியது போல கோலியையும் வீரர்கள் தூக்கிக் கொண்டாட வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.