திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 10 பிப்ரவரி 2024 (08:31 IST)

மூன்றாவது டெஸ்ட்டில் சர்பராஸ் கான் அறிமுகம் நிச்சயம்… பிசிசிஐ தரப்பு தகவல்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே நடந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியைப் பெற்றுள்ளன. இதையடுத்து மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடக்க உள்ளது.

இந்நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டி விசாகப்பட்டிணத்தில் நடக்க உள்ள நிலையில் இந்திய அணியில் இருந்து காயம் காரணமாக கே எல் ராகுல் மற்றும் ரவிந்தர ஜடேஜா ஆகியோர் விலகியுள்ளனர். அவர்களுகுகு பதில் சர்பராஸ் கான் மற்றும் சௌரப் குமார் ஆகிய இருவரும் அணியில் இணைந்தனர். ஆனால் இரண்டு பேருக்குமே வாய்ப்பளிக்கப்படவில்லை.

இந்நிலையில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக சர்பராஸ் கான் கண்டிப்பாக பிளேயிங் லெவனில் களமிறக்கப்படுவார் என பிசிசிஐ தரப்பு தகவல் வெளியாகியுள்ளது.