செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 பிப்ரவரி 2024 (20:18 IST)

செல்லப் பிராணிகளுக்கு ரூ.165 கோடியில் மருத்துவமனை கட்டிய ரத்தன் டாடா

tata
செல்லப் பிராணிகளுக்கு மருத்துவமனை வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்  தொழிலதிபர் ரத்தன் டாடா.
 
இந்தியாவில் உள்ள முன்னனி நிறுவனம் டாடா.   இந்த நிறுவனம்  இரும்பு, கார் வாக உற்பத்தி, சாப்ட்வேர் என அனைத்து வகை துறைகளிலும் ஈடுபட்டு வருகிறது.
 
இந்த நிலையில், தொழிலதிபர் பிராணிகள் மீது அதிக பாசம் கொண்டவர் என்பதால் அவர் செல்ல பிராணிகளுக்கு  மருத்துவ வசதி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்.
 
மும்பையில் இதற்கென ரூ.165 கோடியில் மருத்துவமனை கட்டியுள்ளார். இது இந்தியாவிலேயே மிகப்பெரிய கால் நடை மருத்துவமனை ஆகும். வீடுகளில் வளர்க்கப்படும் கால் நடைகளுக்கு கட்டணம் உண்டு. ஆதரவற்ற கால் நடைகளுக்கு இலவசம் எனத் தகவல் வெளியாகிறது. 
 
கொரொனா காலக் கட்டத்தின்போது, அரசின் பொது நிவாரணத்துகு ரூ.500 கோடிக்கு மேல் நிதி  கொடுத்து உதவியது குறிப்பிடதக்கது.