1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 16 பிப்ரவரி 2024 (10:41 IST)

கிரிக்கெட் அனைவருக்குமான விளையாட்டு.. கவனம் ஈர்த்த சர்பராஸ் கான் தந்தையின் டிஷர்ட் வாசகம்!

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நேற்று ராஜ்கோட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் நீண்ட நாட்களாக டெஸ்ட் போட்டிகளுக்கான வாய்ப்புக்காக காத்திருந்த சரப்ராஸ் கான் அறிமுகமாகியுள்ளார். அவருக்கு டெஸ்ட் வீரருக்கான கேப் அனில் கும்ப்ளேவால் வழங்கப்பட்டது.

அப்போது அவருடன் இருந்த அவரின் தந்தை மற்றும் மனைவி ஆகிய இருவரும் மிகவும் உணர்ச்சிப் பூர்வமாகி கண்ணீர் விட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் கவனத்தை ஈர்த்து வருகிறது.

இந்நிலையில் சர்பராஸ் கான் தந்தை நௌஷத் கான் அணிந்திருந்த டிஷர்ட்டில் வாசகம் இணையத்தில் கவனம் பெற்றுள்ளது. அவரது டிஷர்ட் பின்புறத்தில் “கிரிக்கெட் ஜெண்டில்மேன்களின் விளையாட்டு அல்ல. அனைவருக்குமான விளையாட்டு’ என எழுதப்பட்டு இருந்தது. இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.