வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 11 செப்டம்பர் 2019 (08:47 IST)

காவேரி கூக்குரலுக்காக குரல் கொடுத்த ‘திருக்குறள்” கிரிக்கெட் வீரர்!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்ந்ததில் இருந்தே கடந்த இரண்டு வருடங்களாக ஹர்பஜன்சிங் கிட்டத்தட்ட பச்சைத்தமிழனாகவே மாறிவிட்டார். அவருடைய தமிழ் டுவீட் ஒவ்வொன்றும் ரசிகர்களிடையே பயங்கர வைரலாகி வருவது தெரிந்த்தே. எனவே தான் ஹர்பஜன்சிங்கை தமிழ்ப்புலவர் என்றும் திருக்குறள் என்றும் ரசிகர்கள் அழைப்பதுண்டு
 
 
இந்த நிலையில் தென்னிந்தியாவின் உயிர்நாடியான காவிரி நதிக்கு புத்துயிர் ஊட்டவும், காவேரியை சார்ந்த விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் ’காவேரி கூக்குரல்’ என்ற இயக்கத்தை ஈஷா அறக்கட்டளை நிறுவனர் சத்குரு ஜக்கி ஆரம்பித்தார். இந்த இயக்கத்தின் மூலம் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் காவிரி வடிநிலப் பகுதிகளில் அமைந்துள்ள விவசாய நிலங்களில் அடுத்த 12 ஆண்டுகளில் 242 கோடி மரங்கள் நட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் ’காவிரி கூக்குரல்’ இயக்கத்தின் நோக்கத்தை மக்களிடம் கொண்டு போய் சேர்க்க ஜக்கி மேற்கொண்டுள்ள மோட்டார் சைக்கிள் பேரணி செப்டம்பர் 11ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது
 
 
இந்த காவேரி கூக்குரலின் பேரணி குறித்து ஹர்பஜன்சிங் தனது டுவிட்டரில் கூறியபோது, ‘தமிழகத்துக்கு ஒரு பொக்கிஷமா மக்கள காக்குற தாயா இருக்குது காவேரி ஆறு. அழிஞ்சு போற ஆபத்துல இருக்குற காவேரிய மீட்டெடுக்க ஒரு நம்பிக்கையா வந்திருக்கு #காவேரிகூக்குரல்! நம்ம காவேரிய காப்பாத்தணும்! என்னுடன் ஆதரவு தாருங்கள்’ என்று பதிவு செய்துள்ளார். இந்த டுவீட்டுக்கு ஆயிரக்கணக்கான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது