வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 3 ஜூன் 2024 (13:22 IST)

295 இடங்களில் வெற்றி பெற்று இந்தியா கூட்டணி ஆட்சி அமைக்கும்.! சோனியா காந்தி உறுதி..!!

Soniya Gandhi
மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி  295 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று காங்கிரஸ் முன்னால் தலைவர் சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101-வது பிறந்தநாளை ஒட்டி, டெல்லியில் உள்ள திமுக அலுவலகத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி கருணாநிதி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். 
 
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு முற்றிலும் நேர்மாறாக தேர்தல் முடிவுகள் இருக்கும் என நம்புவதாக கூறினார்.  தேர்தல் முடிவுகள் இண்டியா கூட்டணிக்கு சாதகமாக அமையும்” என்று சோனியா காந்தி தெரிவித்தார் 
 
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று கணித்துள்ள நிலையில், இண்டியா கூட்டணி இதனை எதிர்த்துள்ளது என்று அவர் கூறினார். 

 
மக்களவைத் தேர்தலில் இந்தியா கூட்டணி  295 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று சோனியா காந்தி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.