தொடர்புடைய செய்திகள்
- இந்திய அணிக்குக் கேப்டன் ஆக ஆசைப்பட்டார் பண்ட்… டெல்லி கேப்பிடல்ஸ் அணி உரிமையாளர் பதில்!
- பிரித்வி ஷா மீண்டும் முதலில் இருந்து தொடங்க வேண்டும்… டெல்லி அணி உரிமையாளர் கருத்து!
- கோலி ஃபார்முக்கு திரும்பிவிட்டாரா?... பும்ரா அளித்த நச் பதில்!
- 2025 முதல் 2027 வரை ஐபிஎல் போட்டிகள் எப்போது? அட்டவணை இதோ..!
- 2025 ஐபிஎல் போட்டிகள் தொடக்கம் எப்போது? எத்தனை போட்டிகள்? இறுதிப்போட்டி இந்த தேதியிலா?
பண்ட் ஏலத்தில் செல்ல இதுதான் காரணம்… ஓப்பனாக பேசிய டெல்லி அணி பயிற்சியாளர்!
ஐபிஎல் தொடர் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்து கோப்பையை வெல்லாத அணிகளில் ஒன்று டெல்லி கேப்பிடல்ஸ். அதனால் இந்த ஆண்டு அந்த அணியில் புணரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில்தான் அந்த அணியின் கேப்டனாக செயல்பட்ட ரிஷப் பண்ட் தக்கவைக்கப் படாமல் விடுவிக்கப்பட்டார்.
இப்போது ஏலத்தில் அவர் 27 கோடி ரூபாய்க்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியால் எடுக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் டெல்லி கேப்பிடல்ஸ் அணி பயிற்சியாளரான சஞ்சய் பாங்கர் ஏன் ரிஷப் பண்ட் டெல்லி கேப்பிடல்ஸ் அணியை விட்டு வெளியேறினார் என்பது குறித்துப் பேசியுள்ளார்.
அதில் “ரிஷப் பண்ட் ஏலத்தில் செல்லவேண்டும் என முடிவெடுத்தார். ஏனென்றால் ஒரு அணியால் அதிகபட்ச தொகை கொடுத்து தக்கவைக்கப்படும் 18 கோடி ரூபாய் தொகையை விட தான் அதிக தொகைக்கு ஏலத்தில் போவோம் என அவர் நம்பினார். அதே போல அவருக்கு அதிக தொகையும் கிடைத்தது” எனக் கூறியுள்ளார்.