1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 12 ஜூன் 2018 (12:12 IST)

அனுபவம் வாய்ந்தவர்களுடன் விளையாட கத்துக்குட்டி அணிகளுக்கு வாய்ப்பு கொடுக்கு வேண்டும்- சச்சின்

ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்லாந்து, அயர்லாந்து உள்ளிட்ட கத்துக்குட்டி அணிகளுக்கு அனுபவம் வாய்ந்த அணிகளுடன் விளையாட வாய்ப்பு கொடுக்க வேண்டும் என இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்தார்.
 
இங்கிலாந்து எதிராக நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் ஸ்காட்லாந்து அணி முதலில் பேட்டிங் செய்து 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 371 ரன்கள் எடுத்தது. அதிகப்பட்சமாக மெக்லியோட் 140 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இங்கிலாந்து அணி தரப்பில் பிளன்கெட் மற்றும் ரஷீத் தலா 2 வீக்கெட்டுகளை கைப்பற்றினர்.
 
372 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் அதிரடியாக விளையாடினாலும் பேர்ஸ்டோவ் மற்றும் ஹேல்ஸ் வீக்கெட்டுகளை இழந்த பின் அந்த அணி தடுமாறி இறுதியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இதன்மூலம் கத்துக்குட்டி ஸ்காட்லாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் ஒருநாள் போட்டியில் முதலிடத்தில் உள்ள இங்கிலாந்து அணியை வீழ்த்தி புதிய வரலாறு படைத்தது.
 
ஸ்கட்லாந்து அணியின் இந்த வெற்றிக்கு ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் பிரபலங்கள் தொடர்ந்து வாழ்த்து தெரிவித்து வந்தனர்.
 
இந்நிலையில், இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் இது குறித்து கூறியிருப்பதாவது;-
 
“ ஆப்கானிஸ்தான், அயர்லாந்து, ஸ்காட்லாந்து போன்ற கத்துக்குட்டி அணிகள் அனுபவம் மிக்க அணிகளுடன் ஏராளமான போட்டிகளில் விளையாட வாய்ப்பு அளிக்க வேண்டும்.
 
இது போன்ற வாய்ப்புகள் கத்துக்குட்டி அணிகளுக்கு கிடைத்தால் அனுபவம் வாய்ந்த அணிகளுடன் விளையாடுவதன் மூலம் திறைமையை வெளிக்காட்ட உதவும்” என தெரிவித்துள்ளார்.