முன்னாள் கிரிக்கெட் நடுவர் ரூடி கர்ட்ஸன் கார் விபத்தில் மரணம்!
தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த் முன்னாள் நடுவர் ரூடி கர்ட்ஸ்ன் கார் விபத்தில் மரணம் அடைந்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளின் முன்னாள் நடுவர் ரூடி கர்ட்ஸ்டன் கார் விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 73. அவர் மூன்று பேருடன் சென்ற கார் ரிவர்டேல் அருகே மோதியதில் தலையில் காயம் ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இந்த தகவலை அவரது மகன் ரூடி கோர்ட்சன் ஜூனியர் உறுதிப்படுத்தினார். நெல்சன் மண்டேலா கோல்ஃப் மைதானத்தில் விளையாடிவிட்டு திரும்பிக் கொண்டிருந்த போது இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
1981ஆம் ஆண்டு நடுவராகப் பொறுப்பேற்ற கோர்ட்ஸன், 1992ஆம் ஆண்டு போர்ட் எலிசபெத்தில் இந்தியாவுக்கும் தென்னாப்பிரிக்காவுக்கும் இடையே தனது முதல் சர்வதேசப் போட்டியில் நடுவராக பங்கேற்றார். மொத்தம் 331 சர்வதேசப் போட்டிகளில் நடுவராகப் பணியாற்றினார். அதிக சரவதேச போட்டிகளுக்கு நடுவராக இருந்த இரண்டாவது நடுவர் என்ற பெருமையை பெற்றவர் ரூடி கர்ட்ஸன். விக்கெட் கொடுக்கும் போது கையை மெதுவாக ஸ்லோ மோஷனில் உயர்த்துவதால் கிரிக்கெட் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர்.