தொடர்புடைய செய்திகள்
- 2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!
- கால்பந்து விளையாடும்போது மோதல்.. சமாதானம் பேச சென்ற 19 வயது இளைஞர் கொலை..!
- எப்போது ஓய்வு? – ஓப்பனாக அறிவித்த கால்பந்து ஜாம்பவான் ரொனால்டோ!
- மெஸ்ஸி என்னை விட சிறந்தவரா?... உலகக் கோப்பை எல்லாம் பெரிதில்லை – ரொனால்டோ கருத்து!
- உலகக் கோப்பையை வென்றதும் கல்யாணம்தான்… கிறிஸ்டியானோ ரொனால்டோ அறிவிப்பு!
40 வயதில் பைசைக்கிள் கோல்… ரசிகர்களை வாய்பிளக்க வைத்த GOAT ரொனால்டோ!
போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியானோ ரொனால்டோ உலகளவில் கவனம் பெற்ற விளையாட்டு வீரர்களில் ஒருவர். கால்பந்து உலகில் பல சாதனைகளைப் படைத்துள்ள ரொனால்டோ, அதற்கு வெளியேயும் பல சாதனைகளைப் படைத்துள்ளார். அதிகமாக சம்பாதிக்கும் கால்பந்துவீரர்களில் ஒருவரான ரொனால்டோ, உலகளவில் அதிக பாலோயர்கள் கொண்ட விளையாட்டு வீரர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
கிளப் போட்டிகளில் கிட்டத்தட்ட அனைத்துக் கோப்பைகளையும் வென்றுவிட்டாலும், இன்னும் ரொனால்டோ கால்பந்து உலகக் கோப்பையை தனது அணிக்காக வெல்லவில்லை. தற்போது 38 வயதாகும் ரொனால்டோ சமீபத்தில் கால்பந்து போட்டிகளில் 900 கோல்கள் அடித்து புதிய சாதனையைப் படைத்தார். இன்னும் அவர் மகுடத்தில் சூடப்படாத ஒரே சிறகாக உலகக் கோப்பை மட்டுமே உள்ளது.
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள உலகக் கோப்பைக்குப் பிறகு தான் ஓய்வு பெறுவேன் என ரொனால்டோ அறிவித்துள்ளார். தற்போது 40 வயதில் அல் கலீஜ் அணிக்கு எதிரான க்ளப் போட்டியில் பைசைக்கிள் கிக் கோலை அடித்து ரசிகர்களை வியக்கவைத்துள்ளார். இது அவரின் 954 ஆவது கோல் ஆகும். கடைசியாக 7 ஆண்டுகளுக்கு முன்னர் இந்த முறையில் கோல் அடித்துள்ளார்.