ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sinoj kiyan
Last Updated : திங்கள், 3 பிப்ரவரி 2020 (16:27 IST)

நியூசிலாந்து எதிரான டெஸ்ட், ஒருநாள் போட்டியில் இருந்து ரோஹித் சர்மா நீக்கம் !

நியூசிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் விளையாடிய நான்கு டி-20 போட்டிகளில் அதிரடியாக வெற்றி பெற்றது. குறிப்பாக மூன்றாவது மற்றும் நான்காவது டி20 போட்டிகளில் சூப்பர் ஓவர்களில் த்ரில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் 5 வது டி -20 போட்டியில் விளையாடிய போது அதிரடி பேட்ஸ் மேன் ரோஹித் சர்மாவுக்கு தசை பிடிப்பு ஏற்பட்டதால் அவர் ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
 
ரோஹித் சர்மா விளையாடதது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. இருப்பினும் ரோஹித் சர்மாவின் இடத்தை மற்ற வீரர்கள் நிரப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
 
5 டி20 போட்டிகளிலும் நியூசிலாந்து தோற்றதால் அடுத்து நடக்கவுள்ள டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடரில் வெற்றி பெற கடுமையாகப் போராடும் என தெரிகிறது.