1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rohith Sharma will be most run scored player in world cup

உலகக்கோப்பை முடியும் போது இவர்தான் அதிக ரன்கள் சேர்த்திருப்பார்… சேவாக் கணித்த வீரர்!

இந்தியா
இந்திய அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரரான சேவாக் தற்போது கிரிக்கெட் சம்மந்தமான பல சுவாரஸ்யமான தகவல்களை பேசி வருகிறார். தனது மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் பேசும் அவர் இந்திய அணியையும் இந்திய அணி வீரர்களையும் கூட கடுமையாக விமர்சிக்கிறார்.

இந்நிலையில் இப்போது உலகக் கோப்பை பற்றி பேசியுள்ள அவர் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு செல்லும் நான்கு அணிகளாக இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நான்கு அணிகளை குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில் உலகக் கோப்பை  தொடரில் அதிக ரன்கள் சேர்த்த வீரராக யார் இருப்பார் என்ற கேள்விக்கு பதில் அளித்துள்ளார். அதில் “இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மாதான் உலகக் கோப்பையில் அதிக ரன்கள் சேர்ப்பார்” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
உலகக் கோப்பை நெருங்கும் வேளையில் இதுதான் எனக்குப் பயமாக உள்ளது… கபில் தேவ் கருத்து!