1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rohith Sharma wants hit every ball sixers in ground

யார் பந்து போட்டாலும் சிக்ஸ அடிக்கணும்னு நெனைப்பேன்… ரோஹித் ஷர்மா கெத்து!

ரோஹித் ஷர்மா
இந்திய அணியின் கேப்டன் (ஒருநாள் போட்டிகள்) ரோஹித் ஷர்மா டி 20 மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுள்ளார். தற்போது 38 வயதாகும் ரோஹித் ஒருநாள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்துகிறார். 2027 ஆம் ஆண்டு நடக்கவுள்ள ஐம்பது ஓவர் உலகக் கோப்பை தொடரில் விளையாடுவதுதான் அவரின் தற்போதைய நோக்கமாக உள்ளது.

ஆனால் அது எந்தளவுக்கு சாத்தியம் என்பது தெரியவில்லை. ஏனென்றால் அப்போது அவருக்கு வயது நாற்பதாக இருக்கும். ரோஹித், கோலி போல உடலை ஃபிட்டாக வைத்திருக்கும் நபரும் அல்ல. இதனால் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடக்கும் தொடரோடு அவர் ஒருநாள் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் அவர் சமீபத்தில் ‘யோயோ’ டெஸ்ட்டில் பங்குபெற்றதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அவர் கிரிக்கெட் எதிர்காலம் குறித்துப் பேசுகையில் “களத்தில் இருக்கும்போது யார் பந்து வீசினாலும் நான் சிக்ஸர் அடிக்கவே விரும்புவேன். குறிப்பிட்ட பவுலரை மட்டும் தேர்வு செய்து அடிப்பதெல்லாம் என் ஸ்டைல் இல்லை. எப்போது களத்தில் இருந்தாலும் சிக்ஸர் அடிக்க வேண்டும் என்பதுதான் என் மனநிலையாக இருக்கும்.” எனக் கூறியுள்ளார்.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க் எடுத்த அதிரடி முடிவு.. கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்..!