வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 1 அக்டோபர் 2024 (12:44 IST)

IND vs BAN: 146க்கு ஆல் அவுட்.. 95 ரன்கள் இலக்கு! வங்கதேசத்தை ஸ்தம்பிக்க செய்த இந்தியா!

Test Mach

இந்தியா - வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் தொடரின் இரண்டாவது இன்னிங்ஸில் 146 ரன்களில் வங்கதேசத்தை ஆல் அவுட் செய்துள்ளது இந்தியா.

 

 

இந்தியா - வங்கதேசம் இடையேயான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் இந்தியாவில் நடந்து வருகிறது. இதில் சென்னை சேப்பாக்கத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மகத்தான வெற்றி பெற்றது. அதை தொடர்ந்து தற்போது கான்பூரில் இரண்டாவது டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது.

 

இதில் முதல் இன்னிங்ஸில் வங்கதேச அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதை தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 285 ரன்களை குவித்தது. இன்று இரண்டாவது இன்னிங்ஸ் நடந்து வந்த நிலையில் வங்கதேச அணி 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்கள் சேர்த்தது. இதனால் இந்தியாவிற்கு தற்போது 95 ரன்கள் என்ற எளிய இலக்கு நிர்ணயமாகியுள்ளது.

 

இது வங்கதேசத்தை வெல்ல இந்தியாவிற்கு எளிய இலக்கு என்பதால் இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லும் என ரசிகர்கள் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.

 

Edit by Prasanth.K