டி 20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவேனா?.... ரோஹித் ஷர்மா பதில்!
ரோஹித் ஷர்மா தொடர்ந்து டி 20 கிரிக்கெட் விளையாடுவது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உலகக்கோப்பை தொடரை அரையிறுதியில் இருந்து தோற்று வெளியேறிய பின்னர் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி விமர்சனங்களை சந்தித்துள்ளது. இதனால் டி 20 போட்டிகளுக்கு ஹர்திக் பாண்ட்யாவுக்கு நிரந்தர கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதை மேலும் உறுதிப் படுத்தும் விதமாக இலங்கைக்கு எதிரான டி 20 தொடரில் ஹர்திக் பாண்ட்யா கேப்டனாக நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் இன்று தொடங்கும் ஒருநாள் போட்டிக்காக மீண்டும் அணியில் இணைந்துள்ளார் ரோஹித் ஷர்மா. ஒரு நாள் தொடர் தொடங்குவதற்கு முன்பாக நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கலந்துகொண்ட அவரிடம் டி 20 கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவது குறித்து பேசியுள்ளார்.
அதில் ” மூன்று வடிவிலான போட்டிகளிலும் விளையாடும் வீரர்களுக்கு ஓய்வு தேவை. அதில் நானும் அடக்கம். நியுசிலாந்துக்கு எதிரான டி 20 தொடர் உள்ளது. ஐபிஎல் சீசன் முடியட்டும். இதுவரை டி 20 பார்மட்டில் ஓய்வு பெறுவது குறித்து நான் எதுவும் யோசிக்கவில்லை” எனக் கூறியுள்ளார்.