ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 10 ஜனவரி 2023 (09:47 IST)

இரட்டை சதம் அடித்த இஷான் கிஷானுக்கு இன்று வாய்ப்பில்லையா?

இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி இன்று நடக்க உள்ளது.

இந்த போட்டியில் ஓய்வில் இருந்த ரோஹித் ஷர்மா, விராட் கோலி ஆகியோர் அணிக்கு திரும்ப உள்ளனர். இந்த போட்டிக்கான ஆடும் லெவன் குறித்த எதிர்பார்ப்பு அதிகளவில் உள்ளது.

ஏனென்றால் சுப்மன் கில், இஷான் கிஷான், ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல் என பல வீரர்கள் ஓப்பனிங் இறங்க காத்திருக்கின்றனர். இந்நிலையில் நேற்று பேசிய ரோஹித் ஷர்மா ‘தன்னுடன் சுப்மன் கில் தொடக்க ஆட்டக்காரராக விளையாடுவார்’ எனக் கூறியுள்ளார். அதனால் இஷான் கிஷானுக்கு வாய்ப்பளிக்கப்படாதா என சந்தேகம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.