1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rohith Sharma played as impact player thread to captaincy

ரோஹித் ஷர்மாவை இம்பேக்ட் பிளேயராக களமிறக்கிய மும்பை இந்தியன்ஸ்.. கேப்டன் பதவிக்கு ஆபத்தா?

மும்பை இந்தியன்ஸ்
நேற்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதிய ஐபிஎல் போட்டி நடந்தது. இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் மும்பை அணிக்கு சூர்யகுமார் யாதவ் தலைமையேற்று வழிநடத்தினார். இதனால் ரோஹித் ஷர்மாவுக்கு காயம் ஏதும் ஏற்பட்டிருக்கலாம் என ரசிகர்கள் நினைத்தனர்.

ஆனால் அதிர்ச்சி அளிக்கும் விதமாக ரோஹித் ஷர்மாவை இம்பேக்ட் ப்ளேயராக பேட்டிங்கின் போது இறக்கினர். இது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியடைய வைத்தது. சமீபகாலமாக் ரோஹித் ஷர்மாவின் கேப்டன்சி மற்றும் பேட்டிங் சிறப்பானதாக இல்லை. இதனால் அவரை நீக்கிவிட்டு, சூர்யகுமார் யாதவ்வை கேப்டனாக்கும் முயற்சியில் மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ஈடுபடுகிறதோ என எண்ண தோன்றுகிறது.
அடுத்த கட்டுரையில்
என்னய்யா பண்றீங்க.. ஒரு கேட்ச் புடிக்க இத்தனை பேரா? – ராஜஸ்தான் செய்த மகத்தான சம்பவத்தை பாருங்க!