சனி, 28 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2024 (16:57 IST)

கேலா விளையாட்டு:6,500 விளையாட்டு வீரர் - வீராங்கனையர் பங்கேற்க உள்ளனர் - உதயநிதி ஸ்டாலின்

udhayanithi stalin
கேலா இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழகத்தில் வரும் வரும் ஜனவரி 19 ஆம் தேதி முதல் 31 ஆம் தேதி வரை நடக்கவுள்ளது.
 
இந்த நிலையில், கேலா இந்தியா போட்டிகளை முன்னிட்டு தமிழ்நாட்டிலுள்ள விளையாட்டு அரங்கங்கள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
 
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
 
‘’தமிழ்நாடு விளையாட்டுத்துறை வரலாற்றில் முக்கிய மைல் கல்லாக நடைபெறவுள்ள கேலா இந்தியா போட்டிகளை  முன்னிட்டு தமிழ்நாட்டிலுள்ள விளையாட்டு அரங்கங்கள் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. 
 
அந்த வகையில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஏற்பாட்டு பணிகளை இன்று நேரில் ஆய்வு செய்தோம். 
 
நேரு விளையாட்டு அரங்கில் நவீன முறையில் மேம்படுத்தப்படும் ஓடுதளம் - இருக்கை வசதி - வீரர் - வீராங்கனையருக்கான அறைகள் - நிர்வாகப் பணிகளுக்கான அடிப்படைத் தேவைகள் ஆகியவற்றை ஒவ்வொன்றாக பார்வையிட்டோம். 
 
நாடெங்கிலிருந்தும் 6,500 விளையாட்டு வீரர் - வீராங்கனையர் பங்கேற்கவுள்ள கேலோ இந்தியா இளையோர் விளையாட்டு போட்டிகள், உலக அளவில் தமிழ்நாட்டிற்கு பெருமைத்தேடி தரவுள்ளதில் மகிழ்ச்சி கொள்கிறோம்’’என்று தெரிவித்துள்ளார்.