1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rohith Sharma continue to be Indian team captain bcci meeting update

ரோஹித் ஷர்மாவே கேப்டனாக நீடிப்பார்.. பிசிசிஐ ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு!

விராட் கோலி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரில் ஆஸ்திரேலியா 3-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி பார்டர் கவாஸ்கர் கோப்பைத் தொடரை இழந்துள்ளது. இந்த தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோலி மற்றும் கேப்டன் ரோஹித் ஷர்மா ஆகியோர் சரியாக விளையாடாததே தோல்விக்கு முக்கியக் காரணமாக சொல்லப்படுகிறது.

ரோஹித் ஷர்மா ஒரு இன்னிங்ஸில் கூட 50 பந்துகளை எதிர்கொள்ளவில்லை. இந்த சீரிஸ் முழுக்க அவர் சேர்த்ததே 100 ரன்களுக்குள்தான்.  இதன் காரணமாக அவர் கடைசி டெஸ்ட் போட்டியில் இருந்து விலகிக் கொண்டார். அதனால் ரோஹித் ஷர்மாவிடம் இருந்து ஒருநாள் போட்டிகளுக்கான கேப்டன்சியும் பறிக்கப்படலாம் என சொல்லப்பட்டது.

ஆனால் தற்போது நடந்த பிசிசிஐ ஆலோசனைக் கூட்டத்தில் சாம்பியன்ஸ் டிராபி கோப்பை வரை ரோஹித் ஷர்மாவே டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிகளுக்குக் கேப்டனாக செயல்படுவார் என முடிவெடுக்கப்பட்டுள்ளது. ஆனால் வருங்கால கேப்டனாக பும்ராவை நியமிக்க ஆலோசனையும் நடத்தப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
13 மாதங்களுக்குப் பிறகு இந்திய அணியில் இடம்பிடித்த ஷமி… இங்கிலாந்து டி 20 தொடரில் வாய்ப்பு!