வியாழன், 9 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth

சோகமான பர்த்டே… ரோஹித் ஷர்மாவுக்கு இப்படி ஒரு துரதிர்ஷ்டமா?

கடந்த 2008 ஆம் ஆண்டு ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நிலையில் 15 ஆண்டுகளில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றுள்ளது. இந்த ஐந்து முறையும் அணியை வழிநடத்தியவர் ரோஹித் ஷர்மாதான்.

இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக் கிழமை அவரது 36 ஆவது பிறந்தநாளில் நடந்த போட்டியில் 3 ரன்கள் மட்டுமே சேர்த்து அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். இந்நிலையில் ஒரு சுவாரஸ்யமான தகவலாக, பிறந்தநாளில் நடந்த அனைத்து ஐபிஎல் போட்டிகளிலும் அவர் பெரிய அளவில் ஸ்கோர்களை சேர்க்கவில்லை.

இதுவரை அப்படி நடந்த நான்கு போட்டிகளில் அவரின் அதிகபட்ச ஸ்கோரே 17 தானாம். இதனால் ஐபிஎல் தொடரைப் பொறுத்தவரை ரோஹித் ஷர்மாவுக்கு இதுவரை ஹேப்பி பர்த்டே அமையவில்லை.