1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rohit Sharma shoulder pain setback news for india

தோள்பட்டை வலியால் துடித்த ரோஹித் ஷர்மா மைதானத்தில் இருந்து வெளியேற்றம்… அடுத்தடுத்த போட்டிகளுக்கு சிக்கலா?

ரோஹித் ஷர்மா
டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது நடைபெற்று வரும் நிலையில் இந்திய அணி நேற்று தங்கள் முதல் போட்டியை ஆடியது. இந்தியா மற்றும் அயர்லாந்து அணிகளுக்கு இடையே நடந்த போட்டியில் இந்திய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அயர்லாந்து அணியை இந்திய பவுலர்கள் 96 ரன்களுக்குள் கட்டுப்படுத்தினர்.

இந்த போட்டியில் அதிரடியாக விளையாடிய ரோஹித் ஷர்மா 37 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து ஆடியபோது, தோள்பட்டை வலியால் அவதிப்பட்டார். அவரை இந்திய அணியின் பிஸியோதெரபிஸ்ட் பரிசோதித்தார். இதையடுத்து அவர் தொடர்ந்து ஆடமுடியாத சூழல் ஏற்பட்ட போது அவர் மைதானத்தில் இருந்து வெளியேறினார்.

இது ரசிகர்கள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது. ரோஹித் ஷர்மாவின் வலியின் தீவிரம் என்ன? இந்த பிரச்சனை அவரை அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவதில் சிக்கல்களை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
About Writer
vinoth
அடுத்த கட்டுரையில்
ரிஷப் பண்ட் ஏன் மூன்றாவது வீரராகக் களமிறங்குகிறார்… இந்திய அணி பயிற்சியாளர் அளித்த பதில்!