கேப்டன்சியில் தோனி, கோலியை மிஞ்சிய ரோகித்!

Last Updated: திங்கள், 12 நவம்பர் 2018 (18:38 IST)
சென்னை நேற்று இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான கடைசி மற்றும் 3வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியா வெஸ்ட் இண்டீஸை ஒயிட் வாஷ் செய்தது. 
 
இந்த வெற்றியின் மூலம் புது சாதனையை படைத்துள்ள ரோகித சர்மா, தோனி மற்றும் கோலியின் சாதனையை முறியடித்துள்ளார். இது குறித்த விரிவான செய்தி பின்வருமாறு, 
 
ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி விளையாடிய 12 போட்டிகளில் 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. உலகில் எந்த அணியின் கேப்டனும் இது போன்று 12 போட்டிகளில் 11 போட்டிகளை இதற்கு முன் வென்றது இல்லை.
 
அதோடு, டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்ற முதல் இந்திய கேப்டனும் ரோஹித் சர்மா ஆவார். இதுவரை தோனி, கோலி வைத்திருந்த வெற்றி கணக்கை தற்போது ரோகித் சர்மா முறியடித்துள்ளார். 


இதில் மேலும் படிக்கவும் :