பீல்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டும்: ரோகித் சர்மா பேட்டி

rohit
Last Updated: வெள்ளி, 9 மார்ச் 2018 (16:33 IST)
இந்திய அணி பீல்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
 
இந்தியா, இலங்கை மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு இடையே முத்தரப்பு டி20 கிரிக்கெட் போட்டி தொடர் இலங்கையில் நடந்து வருகிறது. முதல் போட்டியில் இலங்கையிடம் இந்தியா தோல்வி அடைந்த நிலையில் நேற்று இந்திய அணி வங்கதேச அணியுடன் மோதியது.
 
இந்த போட்டியில் முதலில் களமிறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 139 ரன்கள் எடுத்தது. 140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி விளையாடிய இந்திய அணி 18.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 140 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
 
இந்த வெற்றி குறித்து நேற்று ரோகித் சர்மா அளித்த பேட்டியில்,  போட்டியில் சிறப்பாக செயல்பட்டும், இதைதான் அணி வீரர்களிடம் எதிர்பார்தோம், இந்த வெற்றி அணியின் வெற்றியாகும். நாங்கள் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் செய்த தவறுகளை திறுத்தி கொண்டு விளையாடினோம். பவுலர்கள் சிறப்பாக செயல்பட்டார்கள். அடுத்த போட்டியில் பீல்டிங்கில் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என பேசியிருந்தார்.
 


இதில் மேலும் படிக்கவும் :