வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வியாழன், 22 ஆகஸ்ட் 2024 (07:51 IST)

மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு பல மாதங்கள் தவித்தேன் – ராபின் உத்தப்பா உணர்ச்சிப்பூர்வ பதிவு!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர் ராபின் உத்தப்பா, கடந்த 2022 ஆம் ஆண்டு அனைத்து வகை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக சில மாதங்களுக்கு முன்னர் அறிவித்தார்.

உத்தப்பா இந்திய அணிக்காக 2007 ஆம் ஆண்டு அறிமுகமானார். தன்னுடைய முதல் ஒருநாள் போட்டியிலேயே அவர் 86 ரன்கள் சேர்த்து நல்ல கவனம் பெற்றார். இந்திய அணி 2007 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பையை வென்ற போது அந்த அணியில் இருந்த அவர் சில போட்டிகளில் வெற்றிக்குக் காரணமாக இருந்தார்.

இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் சீரான ஆட்டமின்மையால் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் அவர் தனகு ஏற்பட்ட மன அழுத்தம் குறித்துப் பேசியுள்ளார். அதில் “மன அழுத்தம் நம் வாழக்கையை சீரழிக்கும் ஒன்று. அந்த சூழ்நிலையில் வாழவே பிடிக்காது. நமக்கு நாமே சுமையாக மாறிவிடுவோம். நம்பிக்கை என்பது சுத்தமாக இல்லாமல் ஒரு சுழலில் சிக்கிக் கொண்டது போல உணர்வீர்கள்.

2013 ஆம் ஆண்டு அப்படிப்பட்ட மன அழுத்தததை நான் பல மாதங்கள் உணர்ந்தேன். என்னால் படுக்கையை விட்டுக் கூட எழுந்திருக்க முடியாது. நான் எப்படி வாழ்ந்திருக்க வேண்டும்? ஆனால் எப்படி இருக்கிறேன் என்று தோன்றும்.  கண்ணாடி முன் நின்று என் முகத்தை பார்கக்வே தோன்றாது. அந்த சூழ்நிலையில் இருந்து வெளிவர அனைவரும் மருத்துவர் உதவியை நாடவேண்டும்” எனக் கூறியுள்ளார்.