1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 15 ஜூன் 2024 (11:03 IST)

துபாயின் கழிவு மேலாண்மையைப் பாராட்டி அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்த பாடல் ஆசிரியர் வைரமுத்து!

தமிழ் சினிமாவில் பாடல்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்ட காலத்தில் கோலோசிய பாடல் ஆசிரியராக இருந்தவர் வைரமுத்து. ஆனால் சமீபகாலமாக அவருக்கு பாடல் வாய்ப்புகள் அதிகமாக வருவதில்லை. அதற்கு வைரமுத்து பாடகி சின்மயியால் மீ டு குற்றச்சாட்டுக்கு ஆளானதும் ஒரு காரணம். இதன் காரணமாக ஏ ஆர் ரஹ்மான் மற்றும் மணிரத்னம் ஆகியோர் அவரை விட்டுப் பிரிந்தனர்.

அதனால் அவர் இப்போது இலக்கியம், தனி ஆல்பம் போன்றவற்றில் பிஸியாக இருக்கிறார்.  இதற்கிடையில் அவர் முகநூலிலும் தீவிரமாக இயங்கி வருகிறார். அடிக்கடி சமூகவலைதளங்களில் பதிவுகளை இட்டு வரும் அவர், இப்போது துபாயின் கழிவு மேலாண்மையைப் பாராட்டி அதே போல நம் நாட்டிலும் செய்யவேண்டும் என அதிகாரிகளுக்குக் கோரிக்கை வைத்துள்ளார்.

அவரின் பதிவில் “துபாயில் இருக்கிறேன். எனக்குப் பின்னால் மலைபோல் தெரிவது மலையல்ல பதப்படுத்தப்பட்ட துபாயின் கழிவுகளை ஊருக்கு வெளியே கொட்டி மண்ணிட்டு மூடிய குப்பைமேடு. இதில் துர்நாற்றம் இல்லை;
சுகாதாரக் கேடு இல்லை; சுற்றுச்சூழல் மாசு இல்லை; நாளை மக்கிய பிறகு
தாவர எருவாகும் சாத்தியங்கள் உண்டு. வெளிநாடு செல்லும்
அமைச்சர்களும் அதிகாரிகளும் இதுபோன்ற உருப்படியான திட்டங்கள் கண்டு
உள்நாட்டில் செயல்படுத்துங்களப்பா” எனக் கோரிக்கை வைத்துள்ளார்.