1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 17 ஜூலை 2024 (22:46 IST)

கணவரை விவாகரத்து செய்த துபாய் இளவரசி..! இன்ஸ்டாவில் அதிரடி பதிவு..!!

Princes
துபாய் இளவரசி ஷேக்கா மஹ்ரா தனது கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாவில் பகீரங்கமாக அறிவித்துள்ளார். தனது கணவர் மற்றவர்களுடன் உறவில் இருப்பதால் விவாகரத்து செய்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய அரபு அமீரகத்தின் பிரதமரும், துணை அதிபருமான ஷேக் முஹம்மது பின் ராஷித் அல் மக்தூம். இவருடைய குழந்தைகளில் ஷேக்கா மஹ்ரா ஒருவர். இவர், ’துபாய் இளவரசி’ என அழைக்கப்படுகிறார். இவருக்கும், ஐக்கிய அரபு அமீரகத்தை சேர்ந்த ஷேக் மனா பின் முகமது பின் ரஷித் பின் மனா அல் மக்தூம் என்பவருக்கும் கடந்தாண்டு மே மாதம் திருமணம் நடைபெற்றது.
 
இவர்களுக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு குழந்தை பிறந்தது. இதை, கணவன் - மனைவி இருவரும் கொண்டாடியதுடன், இன்ஸ்டா மூலம் ஷேக்கா மஹ்ரா தெரிவித்திருந்தார். இந்த நிலையில், ஷேக்கா மஹ்ரா தனது கணவரை விவாகரத்து செய்வதாக இன்ஸ்டாவில் பகீரங்கமாக அறிவித்துள்ளார்.
 
இதுகுறித்து தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ”அன்புள்ள கணவர், நீங்கள் மற்றவர்களுடன் உறவில் இருப்பதால், நம் விவாகரத்தை இதன்மூலம் நான் அறிவிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். நான் உங்களை விவாகரத்து செய்கிறேன்,  நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், நான் உங்களை விவாகரத்து செய்கிறேன், பார்த்துக்கொள்ளுங்கள்,  உங்கள் முன்னாள் மனைவி எனப் அவர் பதிவிட்டுள்ளார்.


இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருவதுடன், பலரும் இந்தப் பதிவுக்கு தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இளவரசி ஷேக்கா மஹ்ராவின் முடிவுக்கு பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.