1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : செவ்வாய், 13 ஜனவரி 2026 (11:48 IST)

பெங்களூரு மைதானத்தில் ஐபிஎல் போட்டி கிடையாதா? ஆர்சிபி அணியின் ஹோம் கிரவுண்ட் எது?

பெங்களூரு மைதானத்தில் ஐபிஎல் போட்டி கிடையாதா? ஆர்சிபி அணியின் ஹோம் கிரவுண்ட் எது?
ஐபிஎல் வரலாற்றில் பிரிக்க முடியாத அங்கமாக விளங்கும் பெங்களூரு சின்னசாமி மைதானத்திலிருந்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வெளியேறப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
கடந்த ஆண்டு சின்னசாமி மைதானத்தில் நடந்த ஆர்சிபி வெற்றி விழா நிகழ்ச்சியின் போது ஏற்பட்ட விபத்து மற்றும் பாதுகாப்பு காரணங்களால் இந்த அதிரடி முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
 
இதன் காரணமாக, வரவிருக்கும் ஐபிஎல் தொடரில் ஆர்சிபி தனது 'ஹோம் கிரவுண்ட்' போட்டிகளை நவி மும்பை  மற்றும் ராய்ப்பூர் ஆகிய மைதானங்களில் விளையாட திட்டமிட்டுள்ளது. 
 
சின்னசாமி மைதானத்தின் குறுகிய எல்லைகள் மற்றும் ரசிகர்களின் பாதுகாப்பு போன்றவற்றை கருத்தில் கொண்டு இந்த மாற்றம் செய்யப்படலாம் என தெரிகிறது. இது பெங்களூரு ரசிகர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. எனினும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்த பின்னரே இது உறுதி செய்யப்படும்.
 
Edited by Siva