திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : வெள்ளி, 30 டிசம்பர் 2022 (13:45 IST)

விபத்தில் சிக்கிய ரிஷப் பண்ட்டுக்கு பிளாஸ்டிக் சர்ஜரியா?

பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் உத்தரகாண்ட் அருகே ரூர்க்கி பகுதியில் சாலையில் காரில் சென்றுக் கொண்டிருந்தபோது தடுப்பு கட்டையில் மோதி கார் தீப்பிடித்துள்ளது. காரை ரிஷப் பண்ட் ஓட்டி சென்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ரிஷப் பண்டிற்கு படுகாயங்கள் ஏற்பட்ட நிலையில் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு அபாய கட்டத்தை தாண்டியுள்ளார்.

அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ரிஷப் பண்டுடன் பயணித்தவர்களும் அபாய கட்டத்தில் இல்லை என கூறப்பட்டுள்ளது. இது ரசிகர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.

இந்நிலையில் தலையில் அடிப்பட்ட அவருக்கு பிளாஸ்டிக் சர்ஜரி செய்ய உள்ளதாக மருத்துவர்கள் கூறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவரை தற்போது எலும்பு மருத்துவர்கள் மற்றும் பிளாஸ்டிக் சர்ஜன்கள் ஆகியோர் கவனித்து வருவதாக சொல்லப்படுகிறது.