1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Rishab pant may play next match against new zealand

நியுசிலாந்துக்கு எதிரான நாளையப் போட்டியில் ரிஷப் பண்ட்டுக்கு வாய்ப்பு!

இந்திய அணி
இந்திய அணி, நடந்து வரும் சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் வங்கதேசம் மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு அணிகளையும் வென்று அரையிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. இந்திய அணி போட்டிகள் மட்டும் துபாயில் நடப்பதால் அங்குள்ள சூழல் இந்திய அணியினருக்கு சில இடர்ப்பாடுகளை ஏற்படுத்தியுள்ளன.

இந்நிலையில் குறுகிய இடைவெளியில் இரண்டு போட்டிகளை ஆடியதால் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா மற்றும் முகமது ஷமி ஆகியோருக்கு தசை பிடிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனால் நாளை, நியுசிலாந்து அணிக்கு எதிராக நடக்கவுள்ள கடைசி லீக் போட்டியில் இந்திய அணியில் ரோஹித் ஷர்மா இடம்பெற மாட்டார் எனவும் அவருக்குப் பதில் ஷுப்மன் கில் கேப்டன் பொறுப்பை ஏற்பார் எனவும் தகவல்கள் பரவி வருகின்றன. இந்நிலையில் ரோஹித் ஷர்மாவுக்குப் பதில் அணியில் ரிஷப் பண்ட் இடம்பெற வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
தோல்விக்குப் பொறுப்பேற்று கேப்டன் பதவியை துறந்த ஜோஸ் பட்லர்!