நம்ம எண்ட்ரி வேற மாதிரி இருக்கும்… ரிஷப் பண்ட் குறித்து வெளியான தகவல்!
கடந்த ஆண்டு பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகி வரும் அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.
தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வரும் பண்ட், அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்படுகிறார். விபத்து காரணமாக கடந்த ஐபிஎல் சீசனை இழந்த ரிஷப் பண்ட் அடுத்த சீசனுக்காவது அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்தது.
இந்நிலையில் இப்போது வெளியாகியுள்ள தகவலின் படி அவர் பயிற்சி ஆட்டங்களில் கலந்துகொள்ள தொடங்கிவிட்டதாக சொல்லப்படுகிறது. மேலும் அவர் ஐபிஎல் தொடரில் டெல்லி அணிக்கு திரும்புவார் என்றும் அவரே கேப்டனாக செயல்படுவார் என்றும் சொல்லப்படுகிறது.