தொடர்புடைய செய்திகள்
- 15 கோடி நஷ்டம்… பிரபல நிறுவனத்தின் மீது தோனி தொடர்ந்த வழக்கு!
- ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயராகக் களமிறங்க போகிறாரா தோனி?
- நீங்கள் பாகிஸ்தானுக்கு சென்று பாருங்கள்… ரசிகரிடம் கூறிய தோனி – பின்னணி என்ன?
- சச்சினை முந்திய கோலி… என் கப்பு என் காலு என போஸ் கொடுத்த மார்ஷ்! - 2023-ல் கிரிக்கெட் உலகில் கவனம் ஈர்த்த டாப் 10 நிகழ்வுகள்!
- நாங்கள் ஏன் பேட்டிங்கை வலுப்படுத்தினோம் தெரியுமா? – ஆர் சி பி அணியின் பயிற்சியாளர் ஆண்டி ப்ளவர் பதில்!
ஐபிஎல் 2024க்கு தயாரான தோனி… வொர்க் அவுட்டை தொடங்கியதாக தகவல்!
இந்திய அணியில் 2004 ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகமானார் தோனி. தன்னுடைய திறமையான இன்னிங்ஸ்களை வெளிப்படுத்தி 2007 ஆம் ஆண்டே இந்திய டி 20 அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் படிப்படியாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியையும் பெற்று இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார்.
2007 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் ஆகிய கோப்பைகளை அவர் தலைமையில் இந்திய அணி வென்றது. 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிய தோனி இப்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரோடு அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்த ஆண்டில் ஐபிஎல் மார்ச் மாதமே தொடங்க உள்ள நிலையில் அதற்கான வொர்க் அவுட்டை தோனி இப்போது தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் புத்தாண்டை அமீரகத்தில் கொண்டாடினார் தோனி. அதன் பின்னர் ராஞ்சிக்கு திரும்பிய அவர் இப்போது வொர்க் அவுட்டை ஆரம்பித்துள்ளார்.