தொடர்புடைய செய்திகள்
- நீங்கள் பாகிஸ்தானுக்கு சென்று பாருங்கள்… ரசிகரிடம் கூறிய தோனி – பின்னணி என்ன?
- சச்சினை முந்திய கோலி… என் கப்பு என் காலு என போஸ் கொடுத்த மார்ஷ்! - 2023-ல் கிரிக்கெட் உலகில் கவனம் ஈர்த்த டாப் 10 நிகழ்வுகள்!
- நாங்கள் ஏன் பேட்டிங்கை வலுப்படுத்தினோம் தெரியுமா? – ஆர் சி பி அணியின் பயிற்சியாளர் ஆண்டி ப்ளவர் பதில்!
- சி எஸ் கே வின் அடுத்த கேப்டன் யார் என்பதை தோனியே பகிர்ந்துகொள்வார்… காசி விஸ்வநாதன் பதில்!
- ஐபிஎல் தொடரில் தோனிக்கு இது கடைசி ஆண்டா? சிஎஸ்கே நிர்வாக இயக்குனர் தகவல்..!
ஐபிஎல் தொடரில் இம்பேக்ட் பிளேயராகக் களமிறங்க போகிறாரா தோனி?
இந்திய அணியில் 2004 ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகமானார் தோனி. தன்னுடைய திறமையான இன்னிங்ஸ்களை வெளிப்படுத்தி 2007 ஆம் ஆண்டே இந்திய டி 20 அணிக்குக் கேப்டனாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர் படிப்படியாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளின் கேப்டன் பதவியையும் பெற்று இந்திய அணியை சிறப்பாக வழிநடத்தினார்.
2007 ஆம் ஆண்டு டி 20 உலகக் கோப்பை, 2011 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஷிப் ஆகிய கோப்பைகளை அவர் தலைமையில் இந்திய அணி வென்றது. 2019 ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச போட்டிகளில் இருந்து விலகிய தோனி இப்போது ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடி வருகிறார். அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரோடு அவர் ஓய்வு பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஐபிஎல் 2024 சீசனில் தோனி கேப்டன் பதவியைத் துறந்துவிட்டு இம்பேக்ட் பிளேயராக மட்டும் களமிறங்க முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. அதனால் அவர் பேட்டிங்கில் கவனம் செலுத்தாமல் களத்தில் விக்கெட் கீப்பராக மட்டும் செயல்பட முடிவு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. சி எஸ் கே அணிக்கு ருத்துராஜ் கேப்டனாக செயல்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்