ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் கம்பேக் கொடுப்பார்… ஆனால்?- ரிக்கி பாண்டிங் கொடுத்த அப்டேட்!
கடந்த ஆண்டு பிரபல இந்திய கிரிக்கெட் வீரரான ரிஷப் பண்ட் கார் விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் படுகாயமடைந்த ரிஷப் பண்ட் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தசைநார் கிழிவுக்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து இப்போது காயத்தில் இருந்து குணமாகி வரும் அவர் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் களமிறங்குவார் என சொல்லப்படுகிறது.
தற்போது டெல்லி அணிக்காக விளையாடி வரும் பண்ட், அந்த அணிக்கு கேப்டனாகவும் செயல்படுகிறார். விபத்து காரணமாக கடந்த ஐபிஎல் சீசனை இழந்த ரிஷப் பண்ட் அடுத்த சீசனுக்காவது அணிக்கு திரும்புவாரா என்ற கேள்வி எழுந்தது.
இதுபற்றி பேசியுள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ரிக்கி பாண்டிங் “இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் விளையாடுவார். உறுதியாக இந்த சீசனில் விளையாடுவேன் என அவர் கூறினார். ஆனால் அவரால் தொடர் முழுவதும் கீப்பிங் செய்ய முடியுமா? கேப்டனாக செயல்பட முடியுமா என்பது சந்தேகம்தான்” எனக் கூறியுள்ளார்.