1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ricky ponting talked about Indian team coach offer

“இந்திய அணியின் பயிற்சியாளர் பதவியை இந்த காரணத்தால் நிராகரித்துவிட்டேன்” – ரிக்கி பாண்டிங் தகவல்!

ராகுல் டிராவிட்
இந்திய கிரிக்கெட் அணிக்கு மூன்று வடிவிலான போட்டிகளுக்கும் தலைமை பயிற்சியாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறார் ராகுல் டிராவிட். ஆனால் அவர் தலைமையில் முக்கியமான சில கோப்பை தொடர்களில் இந்திய அணி தோற்று வெளியேறியது அதிருப்தியை ஏற்படுத்தியது. சமீபத்தில் நடந்த உலகக் கோப்பை தொடரிலும் இந்திய அணி இறுதிப் போட்டியில் தோற்று மூன்றாவது முறையாகக் கோப்பையை வெல்ல இருந்த வாய்ப்பைத் தவறவிட்டது.

உலகக் கோப்பை தொடரோடு அவர் பதவி காலம் முடிந்தாலும் வரவிருக்கும் டி 20 உலகக் கோப்பை தொடர் வரை அவரின் பதவி காலம் நீட்டிக்கப்பட்டது. இப்போது ஜூன் மாதத்தோடு அவர் பணிக்காலம் முடிய இருக்கும் நிலையில் இந்திய அணிக்கு புதிய பயிற்சியாளரை தேடும் பணியில் பிசிசிஐ ஈடுபட்டு வருகிறது. அதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இதில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங்கும் பிசிசிஐயின் விருப்பப் பட்டியலில் இருப்பதாக சொல்லப்பட்டது. இதுபற்றி இப்போது பாண்டிங் பேசியுள்ளார். அதில் “பிசிசிஐ, என்னை இந்திய அணிக்குப் பயிற்சியாளராக ஆக்க விரும்பி அணுகியது. ஆனால் நான் என் குடும்பத்தை விட்டு பிரிந்திருக்க வேண்டும் என்ற காரணத்தால் அந்த அழைப்பை நிராகரித்துவிட்டேன்” எனக் கூறியுள்ளார்.
 
அடுத்த கட்டுரையில்
இனிமேல் ஐபிஎல் போட்டிகளுக்கு கட்டண சலுகை கிடையாது: சென்னை மாநகர போக்குவரத்து கழகம்..!