வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : செவ்வாய், 2 ஜூலை 2024 (07:24 IST)

ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவாரா ரோஹித்? அவரே அளித்த பதில்!

17 ஆண்டுகளுக்குப் பிறகு டி 20 உலகக் கோப்பையை இந்திய அணி வென்று சாதனை படைத்துள்ளது. உலக கோப்பை டி20 கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் இந்திய அணி தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஒரு தீரில்லர் படம் போல சென்ற அந்த போட்டியில் இந்திய அணி பவுலர்கள் அபாரமாக செயல்பட்டு வெற்றியை வசப்படுத்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணிக்கு உலகக் கோப்பை பெற்றுத் தந்த கேப்டன்களில் ஒருவராக ரோஹித், கபில்தேவ் மற்றும் தோனிக்கு அடுத்து இணைந்துள்ளார். மேலும் இந்த வெற்றியோடு டி 20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் அறிவித்துள்ளார்.

இதனால் அவர் ஐபிஎல் போட்டிகளில் தொடர்ந்து ஆடுவாரா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “கண்டிப்பாக ஐபிஎல் போட்டிகளில் ஆடுவேன்” என்று கூறியுள்ளார். ஆனால் அவர் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக ஆடமாட்டார் என்று சொல்லப்படுகிறது.